Latest News :

திரையரங்குகளில் வெளியாகும் ’அருண் விஜயின் பார்டர்’
Thursday September-16 2021

’குற்றம் 23’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘அருண் விஜயின் பார்டர்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

 

தேசபக்தி கொண்ட ஆக்சன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ்  நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டனர். முன்னோட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கவும் செய்திருக்கிறது.

 

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் அருண் விஜயும் ஒருவர். 'அருண் விஜய்யின் பார்டர்' படத்திலும் துணிச்சல் மற்றும் சவாலான புலனாய்வு துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகையும், பயிற்சியும் செய்து சண்டைக்காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். 

 

இப்படத்தில் அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல், நாயகன் அருண் விஜய்யின் காதலியாக நடித்திருக்கிறார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா, இப்படத்தில் நாயகன் அருண் விஜயுடன் பணியாற்றும் புலனாய்வு துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரும் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்றார். பிரபல நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் 'அருண்விஜய்யின் பார்டர்' திரைப்படத்தை, 11 :11 புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் வெளியிடுகிறார். 

Related News

7734

ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் ‘கருப்பு பல்சர்’!
Friday January-16 2026

யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

Recent Gallery