Latest News :

உயிர்பெற்ற நானியின் போஸ்டர்! - ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘டக் ஜெகதீஷ்’
Thursday September-16 2021

நானியின் நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியான ‘டக் ஜெகதீஷ்’ திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், அப்படத்தின் விளம்பர நடவடிக்கை ஒன்று ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.

 

மால் ஒன்றில் டக் ஜெகதீஷ் படத்திற்கான நடிகர் நானியின் போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு வழக்கமான விளம்பர போஸ்டராக இருந்த அந்த போஸ்டர் திடீரென்று உயிர்பெற்றது. ஆம், அந்த போஸ்டரில் இருந்த நடிகர் நானி, நிஜமாகவே தோன்றி அங்கிருந்த ரசிகர்களிடம் உரையாட தொடங்கிவிட்டார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத ரசிகர்கள் வியப்படைந்தனர்.

 

மிக நவீன தொழில்நுட்ப ஆதரவோடு ஹைதராபாத்-ன் மிகப்பிரபலமான மால்களுள் ஒன்றில், இந்த வியப்பூட்டும் நிகழ்வு நடந்தேறியது. வருகை தந்திருந்த பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்துவதாக இது அமைந்தது. இயற்கையாக நடிக்கும் நடிகர் என்ற புகழ்பெற்றிருக்கும் நானி, அவர்களது ரசிகர்களோடும், பார்வையாளர்களோடும் கொண்டிருந்த நெருக்கமான பிணைப்பின் காரணமாக இந்த செயல்முயற்சியின் வழியாக அவரது டக் ஜெகதீஷ் குடும்பத்திற்கு அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியோடும், அன்போடும் வரவேற்றார். 

 

இந்த வீடியோ, ஹைதராபாத்-ன் இனார்பிட் மால் டெக் சிட்டி என்ற ஒரு மாலில் ஒரு கேளிக்கையான கலந்துசெயல்படும் நிகழ்வாக இருந்தது. நானி-யின் அசைவற்ற ஒரு தோற்ற உருவத்தைக் கொண்டு ஒரு திரை அங்கு அமைக்கப்பட்டிருந்தது. திடீரென்று யாரும் எதிர்பாராதவாறு அந்த திரையில் நானி நேரலையாக தோன்றியது. அங்கிருந்த ரசிகர்களோடு கலந்துரையாடிய நானி, அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் டக் ஜெகதீஷ் பற்றி உற்சாகத்தோடு பேசினார். இந்த திரைப்படம் பற்றி அவர்களது கருத்துகள் என்ன என்று அவர்களிடம் கேட்டறிந்தார். 

 

 

ஷிவா நிர்வாணா இயக்கியிருக்கும் ‘டக் ஜெகதீஷ்’ திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக ரீது வர்மா நடித்திருக்கிறார். மேலும், ஜெகதி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர், வைஷ்ணவி சைதன்யா, தேவதர்ஷினி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

Related News

7735

விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புதிய படத்தின் அறிவிப்பு!
Friday April-17 2026

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது...

திரையுலகில் புதிய புரட்சி ஏற்படுத்தப்போகும் ‘பிக் பிட்ச்சர்’ நிகழ்ச்சி!
Friday April-17 2026

இந்திய பொழுதுபோக்குத் துறையின் போக்கையே மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாக, கேமென் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Gammen Sports and Entertainment Pvt...

நடிப்பிலும் படிப்பிலும் அசத்தும் சிறுவன்! - வாழ்த்தும் பிரபலங்கள்
Friday April-17 2026

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த பினு...

Recent Gallery