Latest News :

நடிகராக கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் ஷபீர்
Friday September-17 2021

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற படங்களில் ஒன்று ‘சகா’. அதற்கு காரணம் அப்படத்தில் இடம்பெற்ற “யாயும்...” என்ற பாடல் தான். ஆம், யூடியுப் தளத்தில் சுமார் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற அந்த பாடல், இன்னமும் பலரின் செல்போன் ரிங் டோனாகவும் ரீங்காரம் அடித்துக்கொண்டிருக்கிறது.

 

அப்படிப்பட்ட பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஷபீர், அப்படத்தை தொடர்ந்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ’தில்லுக்கு துட்டு 2’ என தொடர்ந்து ஹிட் படங்களுக்கு இசையமைத்து வந்ததோடு, ‘கடாரம் கொண்டான்’ போன்ற படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். தற்போது ஷபீரின் பங்களிப்பில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர் என பல துறைகளில் பல வெற்றிகளையும், விருதுகளையும் பெற்றிருக்கும் ஷபீர், விருது பெற்ற பிரபல நடிகர் என்பது இந்தியாவில் பலருக்கு தெரியாது. ஆம், ஷபீர் சிங்கப்பூரில் பல திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வரும் விருது பெற்ற நடிகர் ஆவார். அவரை அங்கு இசையமைப்பாளராக மட்டும் இன்றி நடிகராகவும் நன்கு அறிவர்.

 

அப்படிப்பட்ட நடிகரான ஷபீர், தற்போது சிங்கப்பூரையும் கடந்து உலகம் முழுவதும் ஒரு நடிகராக கவனம் ஈர்த்துள்ளார். ஆம், தற்போது ஷபீர் நடித்துள்ள ‘திஸ் லேண்ட் இஸ் மைன்’ (This Land is Mine) எனும் பிரபல தொடரில் நடித்திருக்கும் கதாப்பாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

இத்தொடரில் ஷபீர் நடித்துள்ள ஹபிபுல்லா கான் பாத்திரம் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயே இந்திய படையில் ’தி டைகர் ஆஃப் ரங்கூன்’ (The Tiger of Rangoon) என்று அழைக்கப்பட்ட புகழ்மிகு பாத்திரம் ஆகும்.

 

ஹபிபுல்லா ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் போர் வீரன். ரங்கூனில் போர் நடவடிக்கைகளில் பங்கு கொண்டவர்.  பின்னர் சிங்கப்பூர் வந்து, அங்குள்ள பிரிட்டிஷ் இராணுவ முகாமில் சுதந்திரம், ஒழுக்கம் மற்றும் அடையாளத்திற்கான போரில் சிக்கிக்கொண்டார். போரின் போது ஒரு இயந்திர துப்பாக்கி முனையில் தனது கையை இழந்தார்.

 

Shabir

 

இத்தொடரில் ஹபிபுல்லா கானின் கதாப்பாத்திர அறிமுகம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது, அது பொதுமக்களிடமிருந்து மிகப்பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. நீண்ட நேரம் படப்பிடிப்பில் தனது ஒரு கையை மடித்து சட்டைக்குள் வைத்துக்கொண்டு, கையிழந்தவர் போல நடித்துள்ள, ஷபீரின் நடிப்பு அற்புதமாக இருந்ததாக அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

 

தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடித்து முடித்துள்ள ஷபீர், தற்போது நடிகராக கவனம் ஈர்த்துள்ளதால், இனி தமிழ் சினிமாவிலும் வெற்றிகரமான நடிகராக வலம் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

7737

Actress Krithi Shetty Inaugurated AZORTE New Store at Phoenix Marketcity Chennai
Monday October-20 2025

Reliance Retail’s premium fashion and lifestyle brand AZORTE made waves in the South with the opening of its all-new store at Phoenix Marketcity, Chennai...

புதிய கோணத்தில் ஹீரோயிசம்! - ’டியூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரன் சொன்ன சீக்ரெட்
Friday October-17 2025

தொடர் வெற்றி பட நாயகனான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம், இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது...

Recent Gallery