சாந்தனு பாக்யராஜ் நடிப்பில், விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘இராவணகோட்டம்’. கண்ணன் ரவி குரூப் நிறுவனம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதி நாள் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருக்கும் இப்படத்தில் பிரபு, இளவரசு, குக் வித் கோமாளி புகழ் தீபா, அருள்தாஸ், சுஜாதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கூறுகையில், “இப்படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடன், உழைத்து உருவாக்கிய தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். படக்குழுவில் உள்ளஅனைவருக்குமே இது ஒரு முக்கியமான திரைப்படம், அவருடைய ஆதரவின் காரணமாக எங்கள் கனவு படைப்பு மிக அழகாக உருவானதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மிகத் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பை வழங்கியுள்ளனர். இத்திரைப்படம் அனைத்து உள்ளங்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

படம் குறித்து தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறுகையில், ”’இராவணகோட்டம்’ படத்தின் திரைப்படத்தின் இந்த பயணம் மனதிற்கு மிக நெருக்கமானதும், பிரத்யேகமானதுமாகும். மற்ற அனைத்து படங்கள் போலவே, இந்த பொது முடக்க காலத்தில், இப்படத்தின் படப்பிடிப்பும் பல தடைகளை சந்தித்தது. தற்போது படத்தின் அனைத்து படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்தது, படக்குழு அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. தான் உறுதியளித்தபடி சரியாக திட்டமிட்டு, படப்பிடிப்பை முடித்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இராவணகோட்டம் திரைப்படம் சாந்தனு பாக்யராஜ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை திரைப்படமாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களும் தன் நடிகரை புகழ்வது போல் இதை நான் கூறவில்லை. படத்தில் சாந்தனு நடித்திருந்த காட்சிகளை பார்த்துவிட்டே, இதனை கூறுகிறேன். விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிக்கப்படவுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ, இசை, உலக திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்.” என்றார்.
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...