நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். அப்படங்களில் ஒன்று தான் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’. சுருக்கமாக ’ராரா’ என்றும் அழைக்கப்படும் இப்படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு கிருஷ் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தில் முதல் பாடலாக “சீரா...சீரா...” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
யுகபாரதி வரிகளில், மகாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் கிருஷ் ஆகியோரின் குரலில் உருவாகியுள்ள இப்பாடல் திரும்ப திரும்ப கேட்கும் பாடலாக உள்ளது.
இப்பாடல் குறித்து ’ராரா’திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறுகையில், “உலகின் மிகவும் துடிப்பான நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு பாடலைநாங்கள் வழங்க விரும்பினோம். மேலும், கிராமத்தில் நாம் அனுபவிக்கும் பழமையான மற்றும் ஆழமாக வேரூன்றிய பண்பாட்டின் சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடலை அமைக்க விரும்பினோம். சீரா சீரா கிராமிய வாழ்க்கையை அழகாக வெளிப்படுத்திப் பார்வையாளர்களை மகிழ்விக்கும் பாடலாக அமைந்துள்ளது. சீரா சீரா பாடல் எங்கள் மனதை மயக்கியது போலவே பார்வையாளர்களின் மனதை உருக்கும் பாடலாக அமையும் என நான் நம்புகிறேன்.” என்றார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...