Latest News :

“சினிமா வளர நிச்சயம் இதை செய்ய வேண்டும்” - நடிகை ரம்யா நம்பீசன் கூறும் யோசனை
Saturday September-18 2021

பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் எல்.சிந்தன் மற்றும் ராஜேஷ்குமார் தயாரித்திருக்கும் படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். 

 

வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நாயகி ரம்யா நம்பீசன், நாயகன் ரியோ ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகை ரம்யா நம்பீசன், “மீண்டும் திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துள்ளது, எங்கள் குழுவில் அனைவருக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திரையுலகில் இது அனைவருக்கும் கடினமான காலமாக இருந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் சினிமாவுக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தது. ஆனாலும் அனைவரும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வேண்டும். அப்போது தான் சினிமா வளரும்.  இத்திரைப்படத்தை நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ஆதரவை தர வேண்டும்.” என்றார்.

 

Plan Panni Pannanum

 

நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், “நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம். எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது,  எனது கனவுகளில் ஒன்று, அது இப்போது நனவாகியிருக்கிறது. கோவிட் தடங்கல்கள் எத்தனை வந்தாலும் அந்த இன்னல்களை தாண்டி,  இத்திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த பொதுமுடக்கம் நம் மீது பெரும் அழுத்தங்களையும், சோகங்களையும் தந்தது. அந்த கடினமான காலகட்டத்தை தாண்டி,  இப்போது அனைவரும் திரையரங்குகள் வந்து திரைபடங்கள் பார்த்து மகிழலாம்.” என்றார்.

 

படம் குறித்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் பேசுகையில், “இப்போது திரையரங்குகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதும், எங்கள் படம் வெளியாவதும், அனைவருக்குமே மிக மகிழ்ச்சி. தயாரிப்பாளர்களின் துணிச்சலான முடிவுகளால் மட்டுமே இன்று இது சாத்தியமாகியுள்ளது. இப்படத்தில் ரியோ மிகச்சிறப்பாக செய்துள்ளார். இன்னும் பல படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ரம்யா நம்பீசன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர். எளிதில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். பால சரவணன் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பார். பூர்ணிமா ரவி இளைய தலைமுறை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெறுவார். 100 சதவீதம் காமெடி சரவெடியாக இத்திரைப்படம் இருக்கும், 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

Related News

7741

ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் ‘கருப்பு பல்சர்’!
Friday January-16 2026

யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

Recent Gallery