பிரபல இயக்குநர் சற்குணம் தனது வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக வழங்க, அன்னம் மீடியாஸ் சார்பாக அன்னக்கிளி வேலு தயாரிப்பில், ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூ மந்திரகாளி’. புதுமுகம் கார்த்திகேயன் நாயகனாகவும், சஞ்சனா புர்லி நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயொன், வி.ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சேலத்தில் உள்ள பங்காளியூர் என்ற கிராமத்தில் வாழும் மக்கள், மற்றவர் மீது பொறாமை கொண்டால், அவர்களுக்கு பில்லி சூனியம் வைத்து, கெடுப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களை திருத்தி நல்வழிப்படுத்த நினைக்கும் அந்த கிராம மக்களில் ஒருவரான நாயகன், அவர்கள் பாணியிலேயே பில்லி சூனியம் செய்பவரை அழைத்து வந்து அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட நினைக்கிறார்.
அதன்படி, பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்லும் நாயகன், அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகு பதுமையாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும் காதல் காதல் கொள்வதோடு,அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான்.
ஆனால் பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது பொறாமை கொண்டு, அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்த, இறுதியில் நாயகன் - நாயகி காதல் என்ன ஆனது, இருவருக்கும் திருமணம் நடந்ததா? பங்காளியூர் திருந்தியதா? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘சூ மந்திரகாளி’ படத்தின் கதை.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கலகலப்பான காமெடி காட்சிகளுக்கு பஞ்சாமில்லாமல் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு, படத்தின் மீது எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘சூ மந்திரகாளி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகிறது.
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...