லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி.என் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சு குரியன் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பாடகர் மனோ, நடிகர் மா கா பா ஆனந்த், ஷா ரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், வித்யா வினுமோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஆர்தர். ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி.துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை சாண்டி அமைக்க, சண்டைக்காட்சிகளை ஃபீனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார்.
ஃபேண்டசி காமெடி ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று முதல் தொடங்குகிறது. இதன் தொடக்க விழா சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர்.பிரபு திலக், ‘A1’ மற்றும் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...