பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமாகிய ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆக, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் சந்தோஷ் நாராயணன் இடம் பிடித்தார்.
மேலும், பா.இரஞ்சித் இதுவரை ’அட்டக்கத்தி’ படத்திற்குப் பிறகு இயக்கிய ’மெட்ராஸ்’, ’கபாலி’, ’காலா’, ’சார்பட்டா பரம்பரை’ என அனைத்துக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசை. இயக்குநர் பா.இரஞ்சித் - இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணி என்றாலே ஹிட் கூட்டணி என்று கோலிவுட்டில் பெயர் எடுத்த இந்த கூட்டணி தற்போது பிரிந்துவிட்டது.
ஆம், பா.இரஞ்சித் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு தென்மா என்பவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பா.இரஞ்சித் தயாரித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்திற்கு இசையமைத்திருப்பதோடு, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
நாடக நடிகர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...