இயக்குநர் சசிகுமார் நாயகனாகாவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘ராஜவம்சம்’.யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட 49 நடிகர், நடிகைகள் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தை கதிர்வேலு இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் சுந்தர்.சி-யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஆவார்.
செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபார் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து செந்தூர் பிலிம்ஸ் டி.டி.ராஜா தயாரிப்பில் வெளியாகும் படம் ’ராஜவம்சம்’ என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...