வி.இசட்.துரை இயக்கத்தில், இயக்குநர் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த ‘இருட்டு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது முறையாக வி.இசட்.துரை இயக்கத்தில், இயக்குநர் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கிறார்.
ரைட் ஐ தியேட்டர் நிறுவனம் சார்பில் வி.இசட்.துரை மற்றும் எஸ்.எம்.பிரபாகரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தலைநகரம் 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மணிஜி வசனம் எழுதுகிறார். ஆர்.எஸ்.வெங்கட் மற்றும் ஏ.பி.வி.மாறன் இணை தயாரிப்பை கவனிக்கின்றனர்.
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...