விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், படத்தை பொங்கல் பண்டிகையன்று வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் விஜயின் புதிய படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. விஜயின் 66 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘தளபதி 66’ என்ற தற்காலிப தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநரான வம்சி பைடிபல்லி இயக்கும் இப்படத்தை, தெலுங்கு சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ்த் திரைப்படமான இப்படத்தின் தலைப்பு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...