விஷாலின் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்பட்த்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இதையடுத்து, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தில் நடித்து வரும் விஷால், அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் பிரபு முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே ‘தாமிரபரணி’ மற்றும் ‘ஆம்பள’ ஆகிய படங்களில் விஷாலுடன் நடித்திருக்கும் பிரபு, மூன்றாவது முறையாக விஷால் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...