மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ ரிலிஸுக்கு தயாராகிவிட்டாலும், சில பிரச்சினைகளால் அக்டோபர் மாதம் வெளியாக இருந்த படம் ரிசம்பருக்கு தள்ளி போய்விட்டது.
இந்த நிலையில், ‘பாகுபலி’ படத்தை போல ‘வேலைக்காரன்’-னையும் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் முதல் பிரதி நான்கரை மணி நேரம் ஓடும் அளவுக்கு நீளமாக இருப்பதோடு, இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட உள்ளதால், என்ன செய்வதென்று குழம்பிய படக்குழுவினர், ஒன்று மற்றும் இரண்டு என்று படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
தற்போது, மோகன் ராஜா, சிவகார்த்திகேயன், எடிட்டர் ரூபன் ஆகியோர் இது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...