நடிகர் ரஹ்மான் ‘சமாறா’ என்ற மலையாளப் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், நடிகர் ரஹ்மான் தவிர படத்தில் நடித்த அனைவரும் டப்பிங் பேசி முடித்து விட்டார்கள்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதல், ரஹ்மான் அங்கு சென்று டப்பிங் பேச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், சென்னையில் உள்ள டப்பிங் அரங்குகளில் டப்பிங் பேச முயன்ற போது, ஏகப்பட்ட திரைப்படங்களின் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அவருக்கு எங்கும் இடம் கிடைக்கவில்லையாம். இதனால், ‘சமாறா’ படத்தின் பின்னணி பணிகள் முடிவடைய தாமதமாக, தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் சூழல் உருவானதாம்.
இதை அறிந்த நடிகை ராதிகா, தனது ராடான் டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசிக்கொள்ள நடிகர் ரஹ்மானுக்கு அனுமதியளித்து உதவியுள்ளார்.
ராடான் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் டப்பிங் பணிகள் மட்டுமே நடைபெற்று வரும் ராடான் டப்பிங் தியேட்டரில் முதல் முறையாக வேறு ஒரு படத்தின் டப்பிங் பணியை மேற்கொள்ள நடிகை ராதிகா அனுமதித்திருப்பது இதுவே முதல் முறையாம்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி...
ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும்...
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப் பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார்...