சினிமாவில் வாரிசுகளில் ஆதிக்கம் என்பது பல ஆண்டுகளாகவே இருக்கிறது. ஆனால், தற்போது பெண் வாரிசுகளை நடிகையாக களம் இறக்குவது அதிகரித்துள்ளது. இயக்குநர் ஷங்கரின் மகள், கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், மற்றொரு முன்னணி இயக்குநரும் தனது மகளை தமிழ் சினிமாவில் நாயகியாக களம் இறக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன், தனது மகளை தமிழ் சினிமாவில் நாயகியாக களம் இறக்கப் போகிறாராம்.
இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்களில் ஒருவரான ராஜீவ் மேனனுக்கு சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில், சரஸ்வதி என்பவர ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கி தயாரித்த ‘சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இந்த நிலையில், சரஸ்வதி தமிழ் திரைப்படம் ஒன்றில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம். இந்த படத்தில் நாயகனாக ‘தரமணி’ புகழ் வசந்த் ரவி நடிக்கிறாராம். இப்படம் குறித்த தகவல்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...