பிரபு தேவா நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படம் பிரம்மாண்டமான முழு நீள ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது.
இதில், ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.
ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெஇன்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...