ஹீரோக்கள் அவதாரம் எடுக்கும் காமெடி நடிகர்களின் பட்டியலில் போண்டா மணியும் இணைந்துள்ளார். வடிவேலுடன் இணைந்து நடித்து பிரபலமான போண்டா மணி, பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது ‘சின்ன பண்ண பெரிய பண்ண’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
10-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் பகவதி பாலா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். ரங்கதுரை மற்றும் கவிதா குப்புசாமி பாடல்கள் எழுத, லட்சுமணன் படத்தொகுப்பு செய்கிறார். தீப்பொறி நித்யா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பவர் சிவா நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
ஷர்மிலி, ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன், ஆதேஷ் பாலா, முத்துக்காளை, சிசர் மனோகர், பெஞ்சமின், வெங்கல்ராவ், சுப்புராஜ், நடேஷ், பெஞ்சமின், விஜய்கணேஷ், ஜான்சன், நெல்லை சிவா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் காமெடியோடு மக்களுக்கு சிறிய மெசஜ் சொல்லும் வகையில் உருவாகிறது.
படம் குறித்து இயக்குநர் பகவதி பாலா கூறுகையில், “கிராம நிர்வாக அதிகாரியாக வரும் போண்டாமணி, அந்த கிராமத்தில் அக்கிரமம் புரியும் சின்ன பண்ண-யிடம் மோதுகிறார். விளைவு? யாரும் எதிர்பாராதது. சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும். அதனால் பெரும் அசம்பாவிதங்களை தடுக்கலாம், என்பதை காமெடியுடன் கொஞ்சம் ஆக்சனையும் கலந்து தந்துள்ளேன்.” என்றார்.
பெங்களூர், மைசூர், ஓசூர், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘சின்ன பண்ண பெரிய பண்ண’ படத்தை சி.ப.தனசேகரன், பகவதி பாலா இருவரும் இணைந்து எஸ்.பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...