‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்த யாஷிகா ஆனந்துக்கு கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டதோடு, அம்மணிக்கு அப்படி...இப்படி...என்று நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே வந்துக் கொண்டிருந்தது. அவரும் வண்டியை ஓட்டுவதற்கு தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக கோலிவுட்டில் பயணித்து வந்த நிலையில், ‘பெஸ்டி’ திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
ஆர்.எஸ்.சினிமா தயாரித்துள்ள இப்படத்தில் ’ஓம் முருகா’ புகழ் அசோக் குமார் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்க, கெளரவ வேடத்தில் லொள்ளு சபா ஜீவா நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை வசனம் எழுதி ரங்கா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜே.வி இசையமைக்க, ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி படத்தொகுப்பு செயா, சுரேஷ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். அருள்குமரன் இணைத்தயாரிப்பை கவனித்துள்ளார்.
இளமை துள்ளலுடன் திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகியுள்ள, இப்படத்தில் திகில் மற்றும் மர்மத்துக்கு புதிய பரிணாமத்தை காட்டியிருப்பதாக இயக்குநர் ரங்கா கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்துள்ளது.
மேலும், அமெரிக்காவில் நடைபெற்ற லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இதனால் கவர்ச்சி நடிகையாக இருந்த யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான அங்கீகாரத்தை இப்படம் பெற்றுக் கொடுத்துள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற விர்ஜின் ஸ்பிரிங் திரைப்பட விழாவில் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள அசோக் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த முறையில் கதை சொல்லல், சிறந்த திரைக்கதை அமைத்தல், சிறந்த இயக்கம் என, படத்தை எழுதி இயக்கிய ரங்காவுக்கு மூன்று விருதுகளும் கிடைத்துள்ளது.
இப்படி, படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ள ‘பெஸ்டி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Reliance Retail’s premium fashion and lifestyle brand AZORTE made waves in the South with the opening of its all-new store at Phoenix Marketcity, Chennai...
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ்...
தொடர் வெற்றி பட நாயகனான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம், இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது...