வனிதாவுடன் நடித்த பவர் ஸ்டாருக்கு ஏற்பட்ட திடீர் மயக்கம்!
Wednesday September-29 2021

காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன், ‘பிக்கப் டிராப்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருவதோடு, அப்படத்தை இயக்கவும் செய்கிறார். இப்படத்தில் நாயகியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். 

 

இப்படத்தின் புகைப்படத்தை வைத்து தான்,  பவர் ஸ்டாருக்கும் வனிதாவும் திருமணமாகி விட்டது, என்ற வதந்தியை கிளப்பி விட்டார்கள். இதையடுத்து பவர் ஸ்டார் மற்றும் வனிதா இருவரும் இணைந்து திருமண வதந்தி குறித்து விளக்கம் அளித்தார்கள்.

 

‘பிக்கப் டிராப்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இன்று பவர் ஸ்டார் சீனிவாசன், வனிதாவுடன் நடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு பவர் ஸ்டாரை அழைத்துச் சென்றனர்.

 

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு, திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

7769

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery