பாடலாசிரியர் சினேகன் பல படங்களில் நடித்து வரும் நிலையில், திருமணத்திற்குப் பிறகு ‘குறுக்கு வழி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘சூப்பர் டூப்பர்’ படத்தில் நாயகனாக நடித்து பாராட்டு பெற்ற துர்வா, பிரனய் ஆகியோர் நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில் சாக்ஷி அகர்வால் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சினேகன், தீபன், ஷிரா, மிப்பு ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடேட் தயாரிக்கும் இப்படத்தை ’வல்லதேசம்’ படத்தை இயக்கிய என்.டி.நந்தா இயக்குவதோடு ஒளிப்பதிவும் செய்கிறார். இப்படத்தின் கலை இயக்குநராக ஆரோக்யராஜ் பணியாற்றுகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செனையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...