தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வர்ம் ஜேஎஸ்கே என்ற ஜேஎஸ்கே சதீஷ்குமார், ’தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’, ‘பரதேசி’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட பல தரமான மற்றும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் இருக்கும் ஜேஎஸ்கே சதீஷ்குமார், தனது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை தமிழ் சினிமாவின் முக்கியமான நிறுவனமாக உயர்த்தியிருப்பதோடு, அந்நிறுவனத்தின் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஜேஎஸ்கே சதீஷ்குமார், தற்போது நடிகராக கவனம் ஈர்த்துள்ளார். ’தரமணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர், முதல் படத்திலேயே மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில், தனது அழுத்தமான நடிப்பால், அனைவரிடமும் பாராட்டு பெற்றவர், அப்படத்தை தொடர்ந்து மம்மூட்டியின் ‘பேரன்பு’, ‘கபடதாரி’ ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்தாலும், தனது நடிப்பு மூலம் கவனிக்க வைத்தவர், தெலுங்கு திரையுலகினர் கவனத்தையும் ஈர்த்தார்.
சமீபத்தில் வெளியான ‘ப்ரண்ட்ஷிப்’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ஜேஎஸ்கே சதீஷ்குமார், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உயர்ந்துள்ளார். எந்த வேடமாக இருந்தாலும், அதற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது நடிப்பு மூலம் அந்த கதாப்பாத்திரத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தாலும், தனக்கு பொருத்தமான நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது, இயக்குநர் நவீனின் ‘அக்னி சிறகுகள்’, வசந்த பாலனின் ‘அநீதி’ ஆகிய படங்களில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஜேஎஸ்கே சதீஷ்குமார், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிந்து மாதவி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ’யாருக்கும் அஞ்சேல்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...