இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி பல படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது ஒரு படத்தை இயக்கி, அதில் தானே முதன்மை கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ‘விநோத சித்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் வரும் அக்டோபர் 13 அ அம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
’லாக்கப்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘மதில்’, ‘ஒரு பக்க கதை’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட பல தரமான படங்களை வெளியிட்டு வரும் ஜீ5 தளத்தின் மற்றொரு தரமான மற்றும் சுவாரஸ்யமான திரைப்படமாக உருவாகியுள்ள ‘விநோத சித்தம்’ படத்தில் தம்பி ராமையா, முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இப்படம் குறித்து சமுத்திரகனி கூறுகையில், “மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.” என்றார்.
தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் படம் குறித்து கூறுகையில், “தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’. இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.” என்றார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...