நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் சார்பில் அமேசான் ஒடிடி தளத்திற்காக நான்கு படங்களை தயாரித்துள்ளார். ‘ஜெய்பீம்’, ‘இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஓ மை டாக்’ ஆகிய இந்த நான்கு படங்களில் ‘இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும்’ சமீபத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜோதிகாவின் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ ஆயுத பூஜை ஸ்பெஷலாக வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
‘பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ ஆகிய படங்களின் வரிசையில் அண்ணன், தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகா தங்கையாகவும், சசிகுமார் அண்ணனாகவும் நடித்திருக்கிறார்கள். ஜோதிகாவின் கணவராக சமுதிரகனி நடித்துள்ளார். சூரி முக்கிய வேடத்தில் நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

’கத்துக்குட்டி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ ஆயுத பூஜை கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்...
இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...