ஏழை மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும், சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நடிகர் விஜய் சேதுபதி, சத்தமில்லாமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதன்படி, சிறுமி ஒருவரின் மருத்துவ செலவுக்காக ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பாரதி என்ற குழந்தை எஸ்.எம்.ஏ என்று சொல்லக்கூடிய ஜெனடிக் டிசாடர் (Genetic Disorder) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இக்குழந்தையை குணப்படுத்துவதற்காக சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவைப்படுகிறது. இதற்காக பாரதி குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் நிதி திரட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, பாரதி குழந்தையின் மருத்துவ செலவுக்காக ரூ.20 லட்சம் நிதி வழங்கியுள்ளார். நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதிக்கு பாரதி குழந்தையின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...