Latest News :

சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’! - நவம்பர் 2 ஆம் தேதி ரிலீஸ்
Friday October-01 2021

நடிகர் சூர்யா அமேசான் பிரைம் ஒடிடி தளத்திற்காக தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நான்கு படங்களை தயாரித்துள்ளார். அப்படங்களில் ஒன்றான ‘இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும்’ கடந்த வாரம் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாவதாக, ஜோதிகா, சசிகுமார், சமுதிரகனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ படம் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், அந்த நான்கு படங்களில் ஒன்றான சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி கொண்டாட்டமாக வரும் நவம்பர் 2 ஆம் தேதி ‘ஜெய் பீம்’ அமேசானில் நேரடியாக வெளியாகிறது.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இப்படம், இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளில் பிரத்யேகமாக வெளியாகிறது.

 

த.செ.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில், பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ்,  நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார்.

 

Jai Bhim

 

அதில் அவர் வெற்றி பெற்றாரா? நீதி கிடைத்ததா? என்பதை அறிய நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தை பாருங்கள்.

 

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இணை தயாரிப்பை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கவனித்துள்ளார்.   

 

Related News

7777

”என்றும் மக்களின் ஹீரோ உதயநிதி” - நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுகாதர் வாழ்த்து
Saturday November-27 2021

சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

’மாநாடு’ திரைப்படம் திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்! - சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்
Wednesday November-24 2021

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு தற்போது ரிலீஸ் வரை வந்துவிட்டது...

நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்! - உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
Wednesday November-24 2021

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்...