Latest News :

’டாக்டர்’ அனைவருக்கும் முக்கியமான படமாக இருக்கும் - சிவகார்த்திகேயன் நம்பிக்கை
Saturday October-02 2021

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

இந்த நிலையில், ‘டாக்டர்’ படக்குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “இரண்டு வருடங்கள் கழித்து அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன் தான்  அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாக இருந்தது. ஆனால் ஓ பேபி பாடல் கொஞ்சம் கஷ்டமாக பயமாக இருந்தது. அதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மக்களுக்கு பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு டயாலாக்கே இல்லை. மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான். எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் படத்தில் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் நெல்சன் எப்படி என்னை இப்படி யோசித்தார்  என்று தோன்றியது. வினய் உன்னாலே உன்னாலே படம் பார்த்ததில் இருந்து பிடிக்கும். நான் உயரமாக இருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன் ஆனால் வினய் முன்னால் நடிக்கும் போது எனக்கே ஆப்பிள் பாக்ஸ் போட்டு தான் நின்றேன். மனுஷன் மிகப்பெரிய உயரமாக இருந்தார். அவரது குரலும் பாடியும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப்பெரிய உதவியாக இருந்தது. தமிழ் தெரிந்த நடிகையுடன் நடிக்கும் போது, படப்பிடிப்பிலேயே காட்சி எப்படி வரும் என்ற தெளிவு இருக்கும். ரெடின், யோகிபாபு இப்படத்தில் கலக்கியுள்ளனர். அருண் ப்ரோ அவர் இப்படத்தில் செய்தது காலாகாலத்திற்கும் பேசப்படும், அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்தில் அட்டகாசமாக இருக்கும், தியேட்டரில் பார்த்தால் உங்களுக்கு புரியும். அனிருத் தான் இந்தப்படத்தை அறிவித்ததிலிருந்தே, இதற்கு அடையாளமாக இருந்தவரே அவர்தான். இந்தப்படம் நடித்த அனைவருக்குமே முக்கியமான படமாக இருக்கும். இந்தப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் நெல்சன் பேசுகையில், “முதலில் சிவகார்த்திகேயன் வழக்காமாக அவரது படங்கள் போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவரிடம் பேசி தான் இப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். அவரிடம் இரண்டு ஐடியா சொன்னேன் இரண்டுமே நல்லாருக்கு நீங்களே முடிவு பண்ணுங்கள் என்றார். என் கடமை அதிகமாகிவிட்டது. படம் எடுக்க ஆரம்பித்த இரண்டு வாரத்தில் இது நன்றாக வந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. படம் நினைத்தது போலவே ஒரு நல்ல படமாக வந்துள்ளது. சிவகார்த்திகேயனே படத்தயாரிப்பாளர் என்பதால், அது எனக்கு உதவியாக இருந்தது. என்னை கேள்வி கேட்காமல் முழு சுதந்திரம் இருந்தது. விஜய் கார்த்திக் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் நினைத்ததை கொண்டு வந்து விடுவார். முழுப்படத்தையும் எடிட் பண்ணிய பிறகு, எனக்கே தெரியாமல் எடிட் செய்துவிட்டார் நிர்மல். அந்தளவு படத்துடன் ஒன்றியிருப்பார். ப்ரியங்கா அவரது முழுத்திறமை இந்தப்படத்தில் வெளிப்படவில்லை, அவருடன் மீண்டும் படங்கள் செய்வேன். வினய் பார்த்து பழகும் போது அப்பாவியாக இருந்தார் ஆனால் படத்தில் வில்லனாக அசத்தியுள்ளார். அருணை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவரை எல்லாப்படத்திலும் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவர் இல்லாதது மிகப்பெரும் வருத்தம். அனிருத்தை வைத்து தான் திரைக்கதையே எழுதுவேன் அவர் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படமும் நினைத்தது போல அழகாக வந்திருக்கிறது. படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

Related News

7780

உடல் நலக்குறைவால் காலமான ரசிகர்! - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
Wednesday April-24 2024

நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!
Wednesday April-24 2024

யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ’ஜெய் ஹனுமான்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
Wednesday April-24 2024

கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...