தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரச்சார சூறாவளியாக சுழன்ற உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று தனது திருவல்லிகேனி சேப்பாக்கம் தொகுதியில், பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு, தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து, எங்கள் வீட்டுப் பிள்ளை என்று பெயர் எடுத்தார்.
தற்போது மீண்டும் சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள உதயநிதி, மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஆர்டிக்கள் 15’ என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் காமெடி நடிகர் மயில்சாமி இன்று தனது 56 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அறிந்த உதயநிதி, இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகை தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி நடிகர் மயில்சாமியின் பிறந்தநாளை கொண்டாடினர்.
மேலும், நடிகர் மயில்சாமியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கு பிரியாணி வழங்கினார். அதேபோல், நடிகர் மயில்சாமி தனது பிறந்தநாளுக்காக 300 குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கினார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூரின் பேய்வீவ் புரோஜக்ட் வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்' படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு...
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...