Latest News :

30 வருட சினிமா பயணம்! - உற்சாகத்தில் நடிகர் விச்சு விஸ்வநாத்
Monday October-04 2021

நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என எந்த வேடமாக இருந்தாலும், அதில் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொண்டு ரசிகர்களை கவரக்கூடிய நடிகர்கள் சினிமாவில் வெற்றிகரமாக பயணிப்பதுண்டு. அப்படி ஒரு நடிகர் தான் விச்சு விஸ்வநாதன்.

 

விஜயகாந்த் நடிப்பில், மறைந்த மணிவண்ணன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘சந்தனக் காற்று’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான விச்சு விஸ்வநாதன், பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில்  தனக்கென்று தனி இடம் பிடித்து தற்போது வரை தனது நடிப்பு பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

 

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்கள் அனைவர் படத்திலும் நடித்தவர், ஒவ்வொரு படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து அசத்தி வருபவர், சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததோடு, தற்போதும் பிஸியான நடிகராகவே வலம் வருகிறார்.

 

வெற்றிகரமான 30 வருட சினிமா பயணம் குறித்து நடிகர் விச்சு விஸ்வநாத் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்துள்ளேன். நாம் சந்தோஷமாக இருந்தால் அந்த உணர்வு நம்மை சுற்றி உள்ளவர்களிடம் அதனுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்புபவன் நான். அதனால் தானோ என்னவோ நான் குணசித்திரம் கலந்த நகைச்சுவை வேடங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

 

தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’அரண்மனை 3’ படத்தில் நடித்துள்ளேன். அவர் இயக்கிய ’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ படங்களிலும் நடித்துள்ளேன். அரண்மனையின் முதல் இரண்டு படங்களிலும் வித்தியாசமான தோற்றித்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது ’அரண்மனை 3’ படத்திலும் அதே போல் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் சுந்தர்.சி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ’அரண்மனை 3’ படம் அமைந்துள்ளது.” என்றார்.

 

Vichu Vishwanath

Related News

7784

’யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா
Friday November-28 2025

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்...

’ரிவால்வர் ரீட்டா’ குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படம் - நடிகை கீர்த்தி சுரேஷ் உறுதி
Wednesday November-26 2025

இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...

முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாடகி மாலதி லக்‌ஷ்மண்!
Wednesday November-26 2025

இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...

Recent Gallery