நடிகை சமந்தா, தனது கணவர் நாகசைதன்யாவை பிரிந்து விட்டார். இது குறித்து நாகசைதன்யாவும், சமந்தாவும் கூட்டாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும், ஒரு தெலுங்குப் படமும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையே கணவரை பிரிந்த சமந்தா, சில காலம் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் உடனடியாக அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.
மேலும், சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும், அவை அனைத்தையும் தவிர்த்து வந்த சமந்தா, அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது அனைவரையும் வியப்படை செய்துள்ளது.
கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தின் கதையும், சாந்தரூபன் கதை சொல்லிய விதமும் சமந்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதால் தான் அவர் உடனே ஓகே சொன்னாராம்.
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...