தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய் விஸ்வா, நடிப்பு மட்டும் இன்றி சமூக பணிகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருபவர். டெல்லியில் தமிழ விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துக் கொடுத்தார்.
மேலும், கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கும் உணவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்களை வழங்கி உதவிய நடிகர் விஜய் விஸ்வா, சினிமாத் துறையில் இருக்கும் பிறரையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், நடிக விஜய் விஸ்வாவின் கொரோனா சேவைக்காக, அவரை கெளரவிக்கும் விதமாக ‘சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்’ சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமையில், மதுரை வெஸ்டர்ன் பார்க் ஓட்டலில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், நடிகர் விஜய் விஸ்வாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் கமலம் குழுமம் சேர்மன் ஜெ.கே.முத்து, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் எ.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற ரோட்டரி சங்க மாநில அளவிலான பொதுக்குழுவில் ஆளுநர் ஜெய்கன் மற்றும் பாலகுரு அவர்களது முன்னிலையில் மாநில அளவிலான கௌரவ உறுப்பினர் பதவி நடிகர் விஜய் விஸ்வாவுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...