பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள்... - மிரள வைக்கும் ‘சனக்’ பட டிரைலர்
Thursday October-07 2021

அதிரடி ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவரான வித்யூத் ஜாம்வால், ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘சனக்’. விபுல் அம்ருத்லால் ஷா, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

 

கனிஷ்க் வர்மா இயக்கியிருக்கும் இப்படத்தில் வித்யூத் ஜாம்வால், பெங்காலி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகை ருக்மணி மைத்ரா, நேகா துபியா, சந்தன ராய் சான்யல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

பணயக் கைதியை மையப்படுத்திய இப்படத்தின் சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி, வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள பணயக் கைதியின் திக் திக் நிமிடங்கள், ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் வரவைக்கும் வகையில் இருப்பது, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை  அதிகரிக்க செய்திருக்கிறது.

 

வரும் அக்டோபர் 15 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள ‘சனக்’ படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் படம் குறித்து கூறிய நடிகர் வித்யூத் ஜம்வால், “இந்த திரைப்படம் கோவிட்-19  பெருந்தொற்று காலகட்டத்தில் படமாக்கப்பட்டது. அனைவரையும் போல நாங்களும் இப்படத்தின் பணிகளுக்காக சென்றோம். இப்படத்திற்காக கடுமையாக உழைத்து, பணிகளை நிறைவு செய்தோம். நீங்கள் படத்தை பார்க்கும் போது உங்களை பற்றிய படைப்பாகவும், உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு உதவி செய்திடும் உத்வேகத்தையும் அளிக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன்.” என்றார்.

Related News

7788

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery