உலகை நெருங்கும் அபாயம்! - எச்சரிக்க வரும் ‘தி புக் ஆஃப் ஏனோக்’
Thursday October-07 2021

படத்தின் தலைப்பு மட்டும் அல்ல, படத்தின் கருவே ஹாலிவுட் சினிமாக்களுக்கு நிகரான ஒன்றாக உருவாகும் தமிழ்ப் பாட்டம் தான் ‘தி புக் ஆஃப் ஏனோக்’ (The Book of Enoch)

 

'ஹாண்ட் ஆப் காட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ராபின் சாமுவேல் தயாரிப்பில், வெயிலோன் இயக்கும் இப்படம், 100 வருடங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் நடந்த ஒரு மோசமான சம்பவம், தற்போது மீண்டும் நடந்தால் என்னவாகும், என்பது குறித்து பேசுகிறது.

 

கொரோனா காலத்தில் மக்கள் மேற்கொண்ட, மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்வது போன்றவை இன்று மட்டும் நடக்கும் விஷயமல்ல. இன்றிலிருந்து சரியாக  100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதே போன்று ஒரு நோய் தொற்றை சந்தித்தது. 'இன்ப்ளுயன்சா வைரஸ்' (Influenza Virus) கொத்துக்கொத்தாக மனிதர்களை அழித்தது. இதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகி மக்கள் இடையே மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு மிகவும் மோசமான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடை பெற்றது. ஒரு வேளை அதே போன்ற மன நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பது தான் - 'தி புக் ஆஃப் ஏனோக்' (The Book of Enoch) படத்தின் கதை.

 

The Book of Enoch

 

விஜய் விஷ்வா கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, பீரவீன் எஸ்.ஏ இசையமைக்கிறார்.

 

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா! என்று பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஹாலிவுட் தரத்தில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

Related News

7789

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery