டாக்டர் குமரகுருபரன் வழங்க கே.எம்பையர் மூவீஸ் சார்பில் டாக்டர் சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த ’உழைக்கும் கைகள்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வேல்ஸ் இன்ஸ்டிடியூட்டின் வேந்தரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் வெளியிட்டு வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் நாயகனாக நடித்துள்ள நாமக்கல் எம்.ஜி.ஆர், பல்மருத்துவரும் படத்தின் தயாரிப்பாளருமான குமரகுருபரன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி , நாட்டியாலயா பிரேம்நாத், கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
தீபாவளியை அடுத்து ’உழைக்கும் கைகள்’ படத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிட தயாரிப்பாளர் குருபரன் திட்டமிட்டுள்ளார்.
கிரண்மை, ஜாகுவார் தங்கம், போண்டாமணி ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...