தாய்மார்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கும்! - ’அரண்மனை 3’ படம் பார்த்தவர்கள் பாராட்டு
Thursday October-07 2021

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’ மற்றும் ‘அரண்மனை 2’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ‘அரண்மனை 3’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ‘அரண்மனை 3’ படத்தை ரிலீஸுக்கு முன்பாக வாய்ப்பு கிடைத்தவர்கள், படம் குறித்து வெகுவாக பாராட்டியிருப்பதோடு, படத்திற்கு தாய்மார்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் கிடைக்கும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாகவும், VFX, CG காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளனர்.

 

அரண்மனை சீரீஸ் படங்களில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும். அரண்மனை 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் முந்தைய இரண்டு படங்களை விட மிகவும் உருக்கமாகவும் தாய்மார்கள் கண்ணீர் சிந்துவது போலவும் அமைந்துள்ளதாம். பொதுவாகவே அரண்மனை படங்களுக்கு தாய்மார்கள் ஆதரவு அதிகம். ஆனால், ’அரண்மனை 3’ திரைப்படத்திற்கு தாய்மார்களின் அதீத ஆதரவு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

 

’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ படங்களில் வரும் கதாநாயகர்கள் கதாப்பாத்திரத்தை விட ’அரண்மனை 3’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஆர்யாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம். ஆர்யாவின் சினிமா கேரியரில் ’அரண்மனை 3’ ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

மேலும், யோகி பாபு மற்றும் விவேக் காம்பினேஷனில் நகைச்சுவை காட்சிகள் பட்டையை கிளப்பியிருப்பதாகவும், தியேட்டரில் ரசிகர்கல் வயிக்று குலுங்க சிரித்து திரையரங்கையே அதிர வைக்கப்போவது உறுதி, என்றும் கூறுகிறார்கள்.

 

அரண்மனை சீரிஸ் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் இயக்குநர் சுந்தர்.சி, ‘அரண்மனை 3’ படத்தில் பல முக்கியமான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அதேபோல், தனது படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இயக்குநர் சுந்தர்.சி, இந்த படத்தில் அதை கூடுதலாக செய்திருக்கிறாராம்.

 

மொத்தத்தில், ‘அரண்மனை 3’ திரையரங்கில் பார்க்கும் படமாகவும், அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும் படமாகவும் நிச்சயம் இருக்கும், என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

7792

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery