கடந்த நான்கு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். கதையின் நாயகனாக வடிவேலு நடிக்கும் படத்தை சுராஜ் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு ‘நாய் சேகர்’ என்று தலைப்பு வைக்கப்பட இருப்பதாக வடிவேலு கூறி வந்த நிலையில், அந்த தலைப்பு வேறு ஒரு படத்திற்கு வைக்கப்பட்டு, அப்படக்குழு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார்கள்.
வடிவேலு நடித்த கதாப்பாத்திரங்களில் மக்களை வெகுவாக கவர்ந்த கதாப்பாத்திரமான நாய் சேகர் தலைப்பு வடிவேலு படத்திற்கே கிடைக்காமல் போனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்ததோடு, அவர் படத்திற்கு வேறு என்ன தலைப்பு வைக்கப்படும் ? என்ற கேள்வியையும், அதை அறிந்துக் கொள்வதில் ஆர்வமும் ஏற்பட்டது.
இந்த நிலையில், வடிவேலு படத்தின் தலைப்பை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, வடிவேலு படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...