திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன், மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி பிறந்தவர் பிறைசூடன். 1985 ஆம் ஆண்டு வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடல் மூலம் தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதி வந்த பிறைசூடன், திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ளார்.
2000க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கும் பிறைசூடன். 5000-க்கும் அதிகமான பக்தி பாடல்களையும் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்த பிறைசூடன் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது மறைவு செய்தி வெளியானதையடுத்து திரையுலகத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...