மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை நடத்திய போலீஸ், இதற்கு பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பதை கண்டுபிடித்தது.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திலீப், நான்கு முறை ஜாமீன் தாக்கல் செய்தும் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஐந்தாவது முறையாகவும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது, பாவனாவை கடத்திய பல்சர் சுனிலுக்கு ரூ. 1.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், போலீசில் மாட்டிக்கொண்டால் ரூ. 3 கோடி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிவித்த அரசு வழக்கறிஞர், பாவனாவை கடத்துவதன் மூலம் திலீப்புக்கு ரூ.65 கோடி லாபம் கிடைக்கும், என்று சுனில் சக கைதிகளிடம் கூறியதாக, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இத்தனை கோடி பணம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்றால், இந்த வழக்கில் திலீப்புக்கு பின்னாள் மேலும் பல இருப்பதாக கூறிய அவர் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதாடினார்.
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...
தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...