திரைப்பட இயக்குநராகும் நடன இயக்குநர் பாபி ஆண்டனி!
Saturday October-09 2021

பிரபுதேவா, லாரன்ஸ், ராஜு சுந்தரம், பாபா பாஸ்கர் போன்றவர்கள் வரிசையில், நடன இயக்குநர் பாபி ஆண்டனியும் திரைப்பட இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

 

பிரபல நடன இயக்குநர் பாபி ஆண்டனி, இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பாலசரவணன், யுவலக்‌ஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

Boby Antony

 

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, யோஹன் இசையமைக்கிறார். சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் குமார் கலையை நிர்மாணிக்கிறார். பாபி ஆண்டனியுடன் இணைந்து ஆண்டனி பாக்யராஜ் மற்றும் சவரி முத்து ஆகியோர் வசனம் எழுதுகிறார்கள்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

Related News

7800

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery