’அநேகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமீரா தஸ்தூர், அப்பட்த்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது பிரபுதேவாவின் ‘பஹிரா’ படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
ஆத்ஜிக் ரசிச்சந்திரன் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பஹிரா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், பிரபுதேவா, அமீரா தஸ்தூர் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய பிரபுதேவா, அனைவரையும் பாராட்டினாலும், நடிகை அமீரா தஸ்தூரை கொஞ்சம் கூடுதலாகவே பாராட்டினார். குறிப்பாக அவரது நடிப்பை பார்த்து தான் வியந்து போனதாக கூறியவர், தமிழ் தெரியவில்லை என்றாலும், கொடுக்கும் காட்சிகளை கச்சிதமாக கையாளும் அமீரா தஸ்தூரின் நடிப்பும், காட்சிகளை அவர் கையாளும் விதமும் சிறப்பாக இருக்கிறது, என்று தெரிவித்தார்.
அதேபோல் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், ”தமிழ் மொழி முழுமையாக தெரியவில்லை என்றாலும், அழுது நடிக்கும் உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர் அற்புதமாக நடித்துள்ளார். அவரது நடிப்பு திறமை மூலம், அவர் நிச்சயம் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார்.” என்றார்.
பிரபுதேவா பல கெட்டப்புகளில் நடித்திருக்கும் ‘பஹிரா’ படத்தில் ஏழு நடிகைகள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும், அமீரா தஸ்தூர் தான் கதையின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...
ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு...