சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சத்யா மூவிசின் தயாரிப்பாளரும், ஹெல்த் கேர் எண்டர்பிரனர் (Health Care Entrepreneur) நிறுவனத்தின் உரிமையாளருமாகிய செந்தில் வி. தியாகராஜன் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷனின் பொருளாளராக ஆக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ட்ராக் அண்ட் ஃபீல்ட், ரக்பி மற்றும் கூடைப்பந்து ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் தேசிய அளவிலான தடகள வீரரான செந்தில் வி.தியாகராஜன், சர்வதேச ரக்பி விளையாட்டில், அமெரிக்கவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஒலிம்பிக் தலைமை பயிற்சியாளர் சார்லி கிரேக் அவர்களின் தலைமையின் கீழ் விளையாடி உள்ளார்.
மேலும், இவர் தமிழ்நாடு ரக்பி விளையாட்டு கழகத்தின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் துணை தலைவர் பொறுப்பிலும் இருக்கின்றார். அதுமட்டுமின்றி, இவர் மேனஜ்மெண்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் அண்ட் இண்டர்நேஷ்னர்ல் டிரேட் அண்ட் ரிலேஷன்ஸ் ஃபிரம் கலிபோர்னியா ஸ்டேட் யூனிவர்சிட்டி மற்றும் ஃபிளெட்சர் ஸ்கூல் ஆப் லாவ் அண்ட் டிப்ளோமசி ஃபிரம் டப்ட்ஸ் யூனிவர்சிட்டி (Management Information Systems and International Trade and Relations from California State University மற்றும் Fletcher School of Law and Diplomacy from Tufts University) ஆக இரண்டு முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...