Latest News :

விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்! - எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘கிரிமினல்’
Monday October-11 2021

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் சி.பி தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் 'கிரிமினல்'. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படமாகும்.

 

நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்ததையை கொலை செய்த உண்மையான கொலையாளியை பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில், சஸ்பென்ஸாகவும், த்ரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள்.

 

'கிரிமினல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Criminal

 

அறிமுக கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் சேதுபதி வெளியிட்டதால், இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டைடில் லுக் போஸ்டரை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆப்பிள் - பைனாப்பிள் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரண் குமார் டொர்னாலா ஒளிப்பதிவு செய்கிறார். பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய,மோகன் பி.கேர் கலையை நிர்மாணிக்கிறார். சசி துரை தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்ற, ஹஸ்வத் சரவணன் பி.ஆர்.ஓவாக பணியாற்றுகிறார்.

 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள 'கிரிமினல்' படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

7806

பார்த்திபனுக்கு பத்து விருதுகள்!
Friday January-30 2026

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பார்த்திபன் அனைத்து முகங்களையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு விருது அறிவிப்பு அமைந்திருக்கிறது...

4 நாட்களில் மிகப்பெரிய வசூல் செய்த ‘ஹாட் ஸ்பாட் 2’! - உற்சாகத்தில் படக்குழு
Thursday January-29 2026

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே...

Recent Gallery