சூர்யா முதன் முறையாக வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இதன் மூலம் இப்படம் இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் 240 நாடுகளில் வெளியாக உள்ளது.
டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களது 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளனர்.
படத்தின் தலைப்பு மற்றும் சூர்யா வழக்கறிஞராக நடிப்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் ஒன்று, ‘ஜெய் பீம்’ படத்தை நிச்சயம் பார்த்தாக வேண்டும், என்ற ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டியுள்ளது.
இந்த மோஷன் போஸ்டர், படத்தின் களம் எதைப் பற்றியது என்பதற்கான ஆழமான ஒரு முன்னோட்டத்தைத் தருகிறது. உயர்ந்த ஆளுமைகளின் உருவப்படங்கள் நிறைந்திருக்கும் நீதிமன்றத்தைச் சுற்றிய ஒரு மெய்நிகர் பயணத்தை இது காட்டுகிறது. மேலும் இந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றிய ஒரு பார்வையையும் இந்த போஸ்டர் காட்டுகிறது.
பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைதயாரிப்பை கவனித்துள்ளார்.
நீதிமன்ற வழக்காடலைக் களமாகக் கொண்ட இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...