தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கம், தமிழக அரசிடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. சங்க உறுப்பினர்களின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சங்க நிர்வாகிகள் இன்று தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதனிடம் நேரில் வழங்கினார்கள்.
இன்று காலை சுமார் 11.30 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ், இணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர் அமைச்சரை சந்தித்து, சங்கத்தின் நலன் சார்ந்த 5 கோரிக்கைகளுடன் கூடிய மனுவை வழங்கினார்கள். அந்த கோரிக்கைகளை படித்து பரிசீலித்த அமைச்சர், அடுத்த ஒரு மாதத்துக்குள் அவற்றை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முன்னதாக கடந்த 7 ஆம் தேதியன்று இதே நிர்வாகிகளை சந்தித்து மேற்படி கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதனைச் சந்தித்து அந்த மனுவை அளிக்கக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே இச்சந்திப்பு மிகத் துரிதமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...