Latest News :

விஜய் சேதுபதியுடன் கைகோர்த்த மருந்து தயாரிப்பு நிறுவனம்! - பெப்ஸிக்கு ரூ.31 லட்சம் நிதி உதவி
Monday October-11 2021

சென்னையை அடுத்த பையனூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் திரைப்பட தொழிலாளர்  சம்மேளனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு, இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமான மேன் கைண்ட் ஃபார்மா 31 லட்ச ரூபாய் நிதியை நன்கொடையாக வழங்கியது.

 

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான மேன் கைண்ட் ஃபார்மா, தரமான மருந்துகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கி வரும் சர்வதேச நிறுவனம். இந்நிறுவனம் மருந்துகளை உற்பத்தி செய்வதுடன் மட்டுமல்லாமல்,  லாபநோக்கமற்ற வகையில் சமூக சேவை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

 

இந்நிலையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ”இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமாக திகழும் எங்கள் நிறுவனம், சமூக மேம்பாட்டிற்காக முன்னுதாரணமான சில நிகழ்வுகளில் பங்காற்றி வருகிறது. அந்தவகையில் எங்கள் நிறுவனம் இந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வரும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து செயல்படத் தொடங்கியிருக்கிறது.

 

திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் கட்டுமானத்திற்காக 31 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறது. பெஃப்ஸி என்பது தமிழ்நாட்டில் திரைப்படத் துறையில் பணியாற்றிவரும்  ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இயங்கி வரும் அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமாகும். இந்த சங்கத்தின் உறுப்பினராக இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த நலத்திட்ட உதவி, கொரோனா காலகட்டத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு உதவும் வகையிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. இது சங்க உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

 

எங்கள் நிறுவனம், சமூக முன்னேற்றத்திற்காக தன்னலமற்று  இயங்கிவரும் நிறுவனம். பாமர மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக நம்பிக்கையுடன் சேவையாற்றி வருகிறது. மேலும் பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்தத் தொகையுடன் மேலும் அவர்கள் தேவைகளை அறிந்து தொடர்ந்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே பெஃப்ஸி தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 கோடிநன்கொடை வழங்கிய விழாவில், இந்நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு, ரூ.31 லட்சம்நன்கொடையை திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட விவரத்தை சம்மேளனத்தின் தலைவரான ஆர் கே செல்வமணியிடம் வழங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

Related News

7809

முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக பொங்கலுக்கு வெளியாகும் ‘ராட்ட’!
Monday January-05 2026

2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...

’திரெளபதி 2’ மூலம் மக்கள் அறியாத வரலாற்றை பேசியிருக்கிறேன் - இயக்குநர் மோகன் ஜி
Monday January-05 2026

’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...

VCare நிறுவனத்துடன் கைகோர்த்த பிரியா ஆனந்த்!
Monday January-05 2026

VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...

Recent Gallery