பூஜா, வினோத் கிஷன், ஜான் விஜய் ஆகியோரது நடிப்பில், பாலாஜி கே.குமார் இயக்கத்தில் வெளியான ‘விடியும் முன்’ விமர்சன ரீதியாக பெரும் பாராட்டு பெற்றது. அமெரிக்காவில் வசிக்கும் இயக்குநர் பாலாஜி கே.குமார், தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.
‘கொலை’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை, விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’கோடியில் ஒருவன்’ படத்தை தயாரித்த இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகும் ‘கொலை’-யில் விஜய் ஆண்டனி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் பங்குதாரர்களான கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பி, பங்கஜ் போஹ்ரா மற்றும் விக்ரம் குமார் ஆகியோர் விஜய் ஆண்டனியை வைத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க உள்ள நிலையில், தற்போது ‘கொலை’ படத்திற்காக லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
உணவு, ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், தோட்டங்கள், திரையரங்கு, கடைகள், உடல்நலம், ரியல் எஸ்டேட், கட்டுமானம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இயங்கி வரும் லோட்டஸ் குழுமம், மலேசியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாகும். மலேசியாவை சேர்ந்த லோட்டஸ் குழுமத்தின் டான் ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா ஷங்கர் மற்றும் ஆர் வி எஸ் அசோக் ஆகியோருடன் இணைந்து லோட்டஸ் பிக்சர்ஸுக்கு தலைமை ஏற்றுள்ளார்.

'விடியும் முன்' படத்தை இயக்க லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சென்னை திரும்பிய பாலாஜி கே குமார், அப்படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றதோடு, அவரது அடுத்து படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தினார். தற்போது அவர் ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கியுள்ளார். 'கொலை' திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் மற்றும் சம்கித் போஹ்ரா ‘கொலை’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு கிரிஷ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, கே.ஆறுசாமி கலையை நிர்மாணிக்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
‘கொலை’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...