ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த ‘ஜெய் பீம்’ டீசர்
Saturday October-16 2021

நீதிமன்ற வழக்காடலைக் கதைக்களமாகக் கொண்ட ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

 

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கியிருக்கிறார்.

 

தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பார்க்க முடியும்.

 

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

Jai Bhim

டிரைலரை பார்க்க இங்கே க்ளீக் செய்யவும்

 

தங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத, தலைக்கு மேல் ஒழுங்காக ஒரு கூரையில்லாத, ஆனால் எளிமையில் சந்தோஷம் காணும் ஒடுக்கப்பட்ட அப்பவிப் பழங்குடி மக்களின் கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதையை ஜெய் பீம் விவரிக்கிறது.

 

சமூக அநீதியும், மனிதர்களின் மிருகத்தன்மையும் இந்த அப்பாவி உயிர்களை பாதிக்க, வழக்கறிஞர் சந்துரு இவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறார். விறுவிறுப்பான, மிகத் தீவிரமான ஒரு கதைக்கரு மனதைப் பிசையும், அதே சமயம் நெகிழவும் செய்யும் ஒரு களத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டத்தை இந்த டீஸர் காட்டியுள்ளது. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை நடிகர் சூர்யா மிக நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

 

ஜெய் பீம் திரைப்படத்தின் இணை தயாரிப்பை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கவனிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் கலையை நிர்மாணித்துள்ளர்.

Related News

7815

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery