சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பட தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
‘வஞ்சகர் உலகம்’ படத்தை தயாரித்த லப்ரிந்த் பிலிம்ஸ் (Labrynth Films) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மனோஜ் பீடா இயக்குகிறார்.
சந்தானம் மற்றும் ரியா சுமன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், இ.ராமதாஸ், அருவி மதன், ஆதிரா, இந்துமதி, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, குரு சோமசுந்தரம் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
சந்தானத்தை முற்றிலும் வேறொரு கோணத்தில் காட்டும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்ய, அஜய் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக ராஜேஷ் பணியாற்ற, ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள், தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...