’கனா’ படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். இவர்களுடன் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
உதயநிதி முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில், இப்படத்திற்கு ‘நெஞ்சுக்கு நீதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, வினோத் ராஜ்குமார் மற்றும் லால்குடி இளையராஜா கலையை நிர்மாணிக்கிறார்கள். ஸ்டன்னர் ஷாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூரின் பேவீவ் புரொஜக்ட்ஸ் நிறுவனங்கள் வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...