Latest News :

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Saturday October-16 2021

இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரது கூட்டணியில் வெளியான படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இப்படம் அறிவித்த நாள் முதலே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இயக்குநர் செல்வராகவன் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருவதால், ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது.

 

இந்த நிலையில், ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் இந்துஜா நாயகியாக நடிக்கிறார். 

 

யாமினி யக்ன  மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார்.  ஆர்.கே.விஜய் முருகன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

Related News

7820

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery